சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக மீனா அறிமுகமான தமிழ் படம் ‘நெஞ்சங்கள்’. அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனாவை ‘நவயுகம்’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது திரையுலகம்.
தமிழில் ‘என் ராசாவின் மனசிலே’வில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார். இந்த படத்துக்கு பிறகு மீனாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘எஜமான், சேதுபதி IPS, வீரா, ராஜகுமாரன், நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, ரிதம், சிட்டிசன், அண்ணாத்த’ என படங்கள் குவிந்தது.
மீனா தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இந்நிலையில், இவர் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 1998-ல் ரிலீஸான தமிழ் படம் ‘நட்புக்காக’.
இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமார் இயக்க, சரத்குமார் அப்பா, மகன் என டபுள் ஆக்ஷனில் நடித்திருந்தார். இதில் மகன் சரத்குமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். முதலில் சிம்ரன் ரோலில் நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மீனாவை அணுகியிருந்தாராம். பின், சில காரணங்களால் மீனாவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.