தமிழ் திரையுலகில் கனவு கன்னியாக விளங்கியவர் நடிகை சிம்ரன். தன் முதல் படத்திலிருந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவராவார். இவர் 1997 ஆம் வருடம் வெளிவந்த “ஒன்ஸ்மோர்” மற்றும் “வி.ஐ.பி” ஆகிய படங்களின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
அந்த படங்கள் வெளியிடப்பட்டு இன்றோடு 23 வருடங்களை நிறைவு செய்கிறது. தன் முதல் தமிழ் திரையுலக அறிமுகத்திலேயே நடிகர் திலகம் சிவாஜி கணேசன், விஜய், சரோஜாதேவி, பிரபுதேவா, மணிவண்ணன், அப்பாஸ், ரம்பா என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தார்.
துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், உன்னை கொடு என்னை தருவேன், பிரியமானவளே, பம்மல்.கே.சம்பந்தம், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களிடத்தில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.
ரஜினிகாந்த், கமல்,விஜய், அஜித், சூர்யா, மாதவன், பிரபுதேவா, பிரசாந்த் என்று பல நட்சத்திர நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இன்று ட்விட்டரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் தான் நடித்தது நேற்று போல் தான் இருக்கிறது என்று குறிப்பிட்டு தான் தமிழ் திரையுலகுக்கு வந்து 23 வருடங்கள் முடிவடைகிறது என்பதை தெரிவித்துள்ளார்.
மேலும் முதல் படத்திலேயே இவ்வளவு முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தது தனக்கு பாக்கியம் என்று குறிப்பிட்டிருந்தார். நடிகை சிம்ரன் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது மலையாள படமான “இந்திரப்பிரஸ்தம்” மூலம். மேலும் அவர் தன் கடைசி மூச்சுவரை தமிழுக்கும் தமிழருக்கும் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.
சிம்ரன் கடைசியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த “பேட்ட” படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
23 years after, the memories of working with the legend #SivajiGanesan sir is so vivid. It was a dream come true and to this day I believe it's the blessing and learning from him that made me who I am.
— Simran (@SimranbaggaOffc) July 4, 2020