பிரபல பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் காலமானார்… வருத்தத்தில் திரையுலகினர்!

  • December 27, 2021 / 10:16 AM IST

சமீப காலமாக தொடர்ச்சியான மரணங்கள் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பிரபல காமெடி நடிகர்கள் விவேக் – பாண்டு – நெல்லை சிவா – மாறன், பிரபல இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன் – தாமிரா, பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் என ரசிகர்களுக்கும், திரையுலக பிரபலங்களுக்குமே பிடித்தமான நபர்களின் இழப்பு அதிர்ச்சியளிக்கிறது.

இந்த சூழலில் இன்னொரு மரணச் செய்தி வந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் பாப்புலர் பின்னணி பாடகர்களில் ஒருவராக வலம் வந்தவர் மாணிக்க விநாயகம். இவர் தமிழில் ‘கண்ணுக்குள்ளே’ (படம் : தில்), ‘கொடுவா மீசை’ (படம் – தூள்), ‘சின்ன வீடா’ (படம் – ஒற்றன்) போன்ற பல பாடல்களை பாடி அசத்தியிருக்கிறார்.

மாணிக்க விநாயகம் பாடகராக மட்டுமில்லாமல் ‘திருடா திருடி, கம்பீரம், பேரழகன், கிரி, திமிரு, வேட்டைக்காரன், யுத்தம் செய்’ போன்ற பல படங்களில் நடிகராகவும் வலம் வந்தார். தற்போது, பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகத்திற்கு நேற்று (டிசம்பர் 26-ஆம் தேதி) திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus