பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்!
March 27, 2023 / 02:17 PM IST
|Follow Us
பிரபல பின்னணி பாடகிகளில் ஒருவராக வலம் வருபவர் பாம்பே ஜெயஸ்ரீ. இவர் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என ஐந்து மொழிகளிலும் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி லைக்ஸ் குவித்திருக்கிறார்.
தமிழில் ‘நறுமுகையே நறுமுகையே, வசீகரா, முதல் கனவே, சுட்டும் விழிச் சுடரே, உயிரே என் உயிரே, பார்த்த முதல் நாளே, மின்னல்கள் கூத்தாடும், யாரோ மனதிலே, வெண்ணிலவே’ போன்ற பல பாடல்களை பாடியிருக்கிறார் பாம்பே ஜெயஸ்ரீ.
கடந்த வாரம் லண்டன் சுற்றுப்பயணத்தில் இருந்த பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது, இவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.