ஊரடங்கில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை: பாடகி சின்மயி புகார்

  • May 13, 2020 / 01:00 PM IST

பெண்கள் பிரச்சனை பற்றி தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பாடகி சின்மயி ஊரடங்கில் வீட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை அதிகரிப்பது பற்றி புகார் கூறியுள்ளார்.

சமீபத்தில் பாய்ஸ் லாக்கர் ரூம் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த இன்ஸ்டாகிராம் குழுவில் உள்ள மாணவர்கள் தங்களுக்குள் பெண்களின் ஆபாச புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்துள்ளனர். அது தொடர்பாக போலீசார் விசாரணையில் அதை உருவாக்கியது ஒரு பெண் என தெரியவந்தது.

இது பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் சின்மயி. பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றியும் அவர் பேசியுள்ளார்.

மேலும் இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார் அவர்.”இந்த ஊரடங்கு பாலியல் வன்புணர்வை நிறுத்தவில்லை. பெண்களுக்கு எதிரான domestic violence அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. லாக்கர் ரூம் பேச்சுகள் நடப்பதே இல்லை என கூறிவிட முடியாது.”

“ஒரு நடிகை, பெண் பத்திரிகையாளர் ட்விட்டுக்கு வரும் கமெண்டுகளுக்கும், அதே வேலையை செய்யும் ஒரு ஆணின் ட்விட்டுக்கு வரும் கமண்டுகளிலும்.. யாருக்கு rape மிரட்டல்கள் அதிகம் வருகிறது?” என கேட்டுள்ளார் சின்மயி.

மேலும் நேற்று 14வயது மாணவி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பற்றியும் பேசியுள்ளார் சின்மயி. “இரண்டு பேர் கோபத்தில் இருக்கிறார்கள். ஒரு ஆணுடன் நீண்ட நாள் பகை. ஆனால் அவர்கள் குடித்துவிட்டு ஒரு 14 வயது பெண்ணை எரிகிறார்கள். அது அவர்களால் முடியும் என்கிற ஒரே காரணத்தால்.”

“அவர்கள் அரசியல் நண்பர்களை வைத்து பெயிலில் வந்துவிடக் கூடாது என நம்புவோம். இலையென்றால் நீதி அவ்வளவு தான்” என சின்மயி கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus