சமீப காலமாக தொடர்ச்சியான மரணங்கள் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பிரபல காமெடி நடிகர்கள் விவேக் – பாண்டு – நெல்லை சிவா – மாறன், பிரபல இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன் – தாமிரா, பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் என ரசிகர்களுக்கும், திரையுலக பிரபலங்களுக்குமே பிடித்தமான நபர்களின் இழப்பு அதிர்ச்சியளிக்கிறது.
இந்த சூழலில் இன்னொரு மரணச் செய்தி வந்திருக்கிறது. சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்தவர் லதா மங்கேஷ்கர். 92 வயதான பாடகி லதா மங்கேஷ்கர் தமிழ், ஹிந்தி, மலையாளம், குஜராத்தி, கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்திருக்கிறார்.
இவர் தமிழ் மொழியில் ‘இங்கே பொன் வீணை, ஆராரோ ஆராரோ,வளையோசை, எங்கிருந்தோ அழைக்கும்’ போன்ற பாடல்களை பாடியிருக்கிறார். சமீபத்தில், லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, சிகிச்சை பலனின்றி லதா மங்கேஷ்கர் இயற்கை எய்தினார் என்று தகவல் கிடைத்துள்ளது.