சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் மிருணாள் தாகூர். மராத்தி மொழியில் அறிமுகமாகி இரண்டு படங்களில் நடித்த இவர், 2018-ஆம் ஆண்டு வெளியான ‘லவ் சோனியா’ படம் மூலம் பாலிவுட்டில் கால் பதித்தார்.
அதன் பிறகு மிருணாள் தாகூருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சூப்பர் 30, பத்லா ஹவுஸ், கோஸ்ட் ஸ்டோரிஸ், டூஃபான், தமாக்கா, ஜெர்சி’ என ஹிந்தி படங்கள் குவிந்தது.
கடந்த ஆண்டு (2022) வெளியான ‘சீதா ராமம்’ படம் மூலம் டோலிவுட்டிலும் கால் பதித்தார் மிருணாள் தாகூர். இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் ரிலீஸானது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஹனு ராகவபுடி இயக்கியிருந்தார்.
இதில் ஹீரோவாக துல்கர் சல்மான் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இப்போது நடிகை மிருணாள் தாகூர் நடிப்பில் ஹிந்தி மொழியில் மூன்று படங்களும், தெலுங்கு மொழியில் ஒரு படமும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவரின் சொத்து மதிப்பு ரூ.9 கோடி என தகவல் கிடைத்துள்ளது.