சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்பட அப்டேட்!

  • August 16, 2020 / 04:50 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “டாக்டர்”. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயனே தயாரித்துள்ளார். “கோலமாவு கோகிலா” படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் மட்டுமின்றி தற்போது சிவகார்த்திகேயன் “அயலான்” படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கலையரசு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “டாக்டர்” படத்தின் வேலைகள் தொடங்கி விட்டது என்று பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து டாக்டர் பட வேலைகள் தொடங்கி விட்டதா என்று இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடம் விசாரித்தபோது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை அல்லது படப்பிடிப்பு தொடங்கவில்லை, ஆனால் இந்த படத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது ஜொலித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்து நடிப்பது மட்டுமல்லாமல் இந்த படத்தின் “செல்லமா” என்ற சிங்கிள் வெளியாகி தற்போது யூடியூபில் சுமார் 20 மில்லியன் வியூஸ்களைப் பெற்று ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது அதையும் இவர்தான் எழுதியுள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இந்த பாடலை அனிருத் ரவிச்சந்தர் மற்றும் ஜொனிதா காந்தி இருவரும் சேர்ந்து பாடியுள்ளார்கள்.

டாக்டர் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் வினை வில்லனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விரைவில் வெளியாகவிருக்கும் டாக்டர் திரைப்படத்தை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus