அதர்வாவுக்கு பதிலாக நடித்த சிவகார்த்திகேயன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

  • January 10, 2023 / 12:58 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அதர்வா. இவர் நடிகர் முரளியின் மகனாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்துக் கொண்டு தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இவருக்கு அமைந்த முதல் படத்திலேயே ஹீரோயின் சமந்தா தான். அது தான் ‘பாணா காத்தாடி’.

‘பாணா காத்தாடி’ படத்துக்கு பிறகு நடிகர் அதர்வாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்பு குதிரை, சண்டி வீரன், ஈட்டி, கணிதன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், செம போத ஆகாதே, இமைக்கா நொடிகள், பூமராங், 100, தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம், ட்ரிகர், பட்டத்து அரசன்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

தற்போது, அதர்வா நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு (2022) ரிலீஸான தமிழ் படம் ‘டான்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார்.

இதில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். ஆனால், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் சிபி சக்கரவர்த்தி அதர்வாவை அணுகியிருந்தாராம். பின், சில காரணங்களால் அதர்வாவால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus