நானிக்கு பதிலாக நடித்த சிவகார்த்திகேயன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

  • January 10, 2023 / 02:03 AM IST

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் ‘அயலான், மாவீரன்’, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘மாவீரன்’ படத்தை ‘மண்டேலா’ புகழ் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு (2022) மே 13-ஆம் தேதி வெளியான படம் ‘டான்’.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும், முக்கிய ரோல்களில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனிஸ்காந்த், பால சரவணன், காளி வெங்கட், RJ விஜய், ஷிவாங்கி ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. முதலில் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் சிபி பிரபல தெலுங்கு நடிகர் நானியை அணுகியிருந்தாராம். பின், சில காரணங்களால் நானியால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus