சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு இன்று திருமண நாள்… ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட ரசிகர்!

  • August 27, 2020 / 09:05 PM IST

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன்’ என படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ மற்றும் ‘அயலான்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 27-ஆம் தேதி) நடிகர் சிவகார்த்திகேயன், ஆர்த்தி தம்பதியினருக்கு 10-வது திருமண நாளாம். இவர்களுக்கு திரையுலக நட்சத்திரங்களும், சிவகார்த்திகேயனின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்த வண்ணமுள்ளனர். 2010-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனின் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன், ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற மகள் உள்ளார். சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகர் ஒருவர் ‘டாக்டர்’ படத்தின் ‘செல்லம்மா’ பாடலுடன் சிவகார்த்திகேயன் – ஆர்த்தியின் வீடியோவை இணைத்து எடிட் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/vinnavansk/status/1298824356328480769

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus