ஷூட்டிங் போலாமா என்று கேட்ட … வெங்கட் பிரபு

  • October 21, 2022 / 12:09 AM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் டான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார் . S.J.சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார் . பிரியங்கா அருள் மோகன் மீண்டும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

டான் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . இந்த படம் மே மாதம் 13-ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் படத்தில் நடிக்க தொடங்கினார் சிவகார்த்திகேயன் . இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் நடந்து முடிந்தது . தமன் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் . படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . படம் வருகின்ற அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது

இந்நிலையில் சமீபத்தில் பிரின்ஸ் படத்திற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார் சிவகார்த்திகேயன் .அப்போது ஒரு இந்திய இளைஞன் பிரிட்டீஷ் பெண்ணை காதலிக்கும் சிம்பிளான கதைக்களத்தில் தான் சிறப்பான காமெடியை அனுதீப் புகுத்தி உள்ளதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்து இருந்தார் . ரசிகர்கள் பலரும் இந்த படத்தை காண ஆர்வத்துடன் உள்ளனர் .

இது ஒரு பக்கம் இருக்க நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படம் வெளியாக உள்ள காரணத்தினால் ரசிகர்களிடம் ட்வீட்டரில் உரையாடினார் . அப்போது இயக்குனர் வெங்கட் பிரபு ஷூட்டிங் நம்ம எப்போ போறோம் என்று சிவகார்த்திகேயனிடம் கேட்டார் அதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன் எனக்கு கதையை எப்போ சொல்லுவீங்க என்று கேட்டார் . தற்போது இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus