சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். முதல் படத்திலேயே முன்னணி நடிகரை இயக்கும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைத்து விடாது. ஆனால், ஏ.ஆர்.முருகதாஸுக்கு அமைந்தது. அந்த படம் தான் ‘தல’ அஜித் ஹீரோவாக நடித்த ‘தீனா’.
‘தீனா’வின் சக்சஸ், ஏ.ஆர்.முருகதாஸுக்கு ‘புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்தை வைத்து ‘ரமணா’ என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கியது. ‘ரமணா’வும் சூப்பர் ஹிட்டாக தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குநரின் லிஸ்டில் இடம் பிடித்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இதன் பிறகு சூர்யாவுடன் ‘கஜினி, 7ஆம் அறிவு’, அமீர் கானுடன் ‘கஜினி’ (ஹிந்தி), ‘தளபதி’ விஜய்யுடன் ‘துப்பாக்கி, கத்தி, சர்கார்’, ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவுடன் ‘ஸ்பைடர்’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் ‘தர்பார்’ என அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் கைகோர்த்து மாஸ் காட்டினார் ஏ.ஆர்.முருகதாஸ்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இப்படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் 23-வது படமாம். இதற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, இப்படத்தின் ஷூட்டிங்கை இன்று முதல் பூஜையுடன் ஆரம்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
#SK23 Begins ❤️#ARM #Sivakarthikeyan #Anirudh pic.twitter.com/DOZISGRZUL
— Sivakarthikeyan News (@ActorSK_News) February 14, 2024