‘டான்’ பட ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்த நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்… வைரலாகும் வீடியோஸ்!
February 18, 2021 / 11:39 AM IST
|Follow Us
சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’, ‘அயலான்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக அறிவிப்பு வந்தது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தான் இயக்குகிறாராம்.
இவர் டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். ‘டான்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தனது ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
மேலும், முக்கிய ரோல்களில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனிஸ்காந்த், பால சரவணன், காளி வெங்கட், RJ விஜய், சிவாங்கி ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 17-ஆம் தேதி) சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘டான்’ பட ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இக்கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.