‘மாவீரன்’ பட ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்த நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்… வைரலாகும் வீடியோ!

  • February 18, 2023 / 06:36 PM IST

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது இவர் நடிப்பில் ‘அயலான், மாவீரன்’, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘மாவீரன்’ படத்தை ‘மண்டேலா’ புகழ் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்குகிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் மிஷ்கின், சரிதா, யோகி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள். இதனை ‘சாந்தி டாக்கீஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று (பிப்ரவரி 17-ஆம் தேதி) சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘மாவீரன்’ படத்தின்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இக்கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus