‘SK 20’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்த நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்… வைரலாகும் வீடியோ!
February 18, 2022 / 01:32 PM IST
|Follow Us
டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அயலான், டான்’ மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம், இயக்குநர் அனுதீப் கேவி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் அனுதீப் கேவி படம் (SK 20) ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் காரைக்குடியில் ஜெட் ஸ்பீடில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 17-ஆம் தேதி) நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘SK 20’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இக்கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.