பிரபல தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜாவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்!

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அயலான், டான்’ மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம், இயக்குநர் அனுதீப் கேவி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘Mr.லோக்கல்’. இந்த படத்தை இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்க, ஹீரோயினாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். தற்போது, இந்த படத்துக்காக தனக்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டு ரூ.11 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும், பேலன்ஸ் ரூ.4 கோடியை தயாரிப்பாளர் தனக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி ஞானவேல்ராஜா மீது சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.