மாற்றங்கள் கூறி இயக்குநரை நெருக்கும் சிவகார்த்திகேயன் !

  • January 26, 2023 / 08:38 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வரும் கதாநாயகனாக இருக்கிறார் .இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பிரின்ஸ் . இந்த படத்தை தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கி உள்ளார் . தீபாவளி விழாவை முன்னிட்டு இந்த படம் வெளியாகி இருந்தது . மிக பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது

சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார் . இந்த படத்தின் தலைப்பு மாவீரன் என்று அறிவித்து இருந்தனர் . முதலில் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது . ஆனால் பின்பு அந்த தகவல் பொய் என்று கூறப்பட்டது .

தற்போது மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மிஷ்கின் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . அதில் சட்டமன்ற உறுப்பினராக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது . மாவீரன் படம் அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என்ற எண்ணமும் ரசிகர்களிடம் எழுந்து உள்ளது .

இந்நிலையில் தற்போது மாவீரன் படத்தின் படப்பிடிப்பில் சில மாற்றங்களை செய்துள்ளனர் . சிவகார்த்திகேயனுக்கு படத்தின் கதை மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் சில மாற்றங்களை செய்ய சொல்லி இருக்கிறார் . இதனால் முன்பு படம்பிடித்த காட்சிகளை நீக்கிவிட்டு புதிதாக மீண்டும்
படப்பிடிப்பை தொடங்க உள்ளனர் . 45 நாட்களில் மீண்டும் படப்பிடிப்பு நடத்த உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus