தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படம் என 2 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் 21-வது படமாம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘ப்ரேமம்’ படம் மூலம் ஃபேமஸான சாய் பல்லவி நடிக்கிறார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.
இதனை ‘சோனி பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ மூலம் தயாரிக்கிறாராம். இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில், இந்த படத்துக்கு ‘அமரன்’ என டைட்டில் வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை கமல் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்ததுடன், டைட்டில் டீசரையும் வெளியிட்டுள்ளார்.