தீபாவளி ரேஸில் சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தியுடன் மோதப்போகும் தனுஷ்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் தான் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, திருச்சிற்றம்பலம், வாத்தி’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், அருண் மாதேஸ்வரன், சேகர் கம்முலா படங்கள் மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என ஒன்பது படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் செல்வராகவன் – தனுஷ் காம்போவில் தயாராகும் ‘நானே வருவேன்’ படத்தின் போஸ்டர்ஸ் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த போஸ்டர்ஸ் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தை ‘வி கிரியேஷன்ஸ்’ கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்து வருகிறாராம். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதே நாளில் சிவகார்த்திகேயனின் ‘ப்ரின்ஸ்’ மற்றும் கார்த்தியின் ‘சர்தார்’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share.