டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் ‘அயலான், மாவீரன், ப்ரின்ஸ்’, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘ப்ரின்ஸ்’ படம் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. ‘மாவீரன்’ படத்தை ‘மண்டேலா’ புகழ் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்குகிறார்.
இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று சிவகார்த்திகேயன் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தல’ அஜித்தை நேரில் சந்தித்து பேசியதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை சிவகார்த்திகேயனே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதுடன், அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார். இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. இப்போது அஜித் இயக்குநர் ஹெச்.வினோத்தின் ‘துணிவு’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Met AK sir after long time
yet another meeting with sir, to cherish for life Thank you for all the positive words and wishes sir
pic.twitter.com/yVaYIc3Ca5
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 23, 2022