காமெடி நடிகர் கவுண்டமணியை நேரில் சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன்… வைரலாகும் ஸ்டில்!

‘காமெடி’ என்று சொன்னாலே கவுண்டமணியின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் கவுண்டமணி பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

கவுண்டமணி மற்றும் செந்தில் காம்போவில் உருவான காமெடி காட்சிகள் எத்தனை முறை பார்த்தாலும் குபீர் சிரிப்பை வரவைக்கும். ஆரம்பத்தில் சில படங்களில் மிக சிறிய ரோலில் வலம் வந்த கவுண்டமணி, ’16 வயதினிலே’ படத்தில் தான் அவரின் கேரக்டருக்கு அதிக ஸ்கோப் இருந்தது. ’16 வயதினிலே’ படத்துக்கு பிறகு நடிகர் கவுண்டமணிக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. பல படங்களில் காமெடியில் அசத்தியத்துடன் ’49-ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ போன்ற படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து ரசிகர்களை லைக்ஸ் போட வைத்தார் கவுண்டமணி. தற்போது, நடிகர் கவுண்டமணியும், டாப் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயனும் நேரில் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர், டான், அயலான்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share.