ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் சிவகார்த்திகேயன்

  • January 23, 2023 / 11:32 AM IST

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வரும் கதாநாயகனாக இருக்கிறார் .இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பிரின்ஸ் . இந்த படத்தை தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கி உள்ளார் . தீபாவளி விழாவை முன்னிட்டு இந்த படம் வெளியாகி இருந்தது . மிக பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது

சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார் . இந்த படத்தின் தலைப்பு மாவீரன் என்று அறிவித்து இருந்தனர் . முதலில் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது . ஆனால் பின்பு அந்த தகவல் பொய் என்று கூறப்பட்டது .

தற்போது மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மிஷ்கின் நடித்து வருகிறார் . மேலும் அவர் அதில் சட்டமன்ற உறுப்பினராக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது . இதனால் மாவீரன் படம் அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என்ற எண்ணமும் ரசிகர்களிடம் எழுந்து உள்ளது .

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து ஏ.ஆர் .முருகதாஸ் படம் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . இது முழுக்க முழுக்க ஆக்ஷன் நிறைந்த படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது . இது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை தற்போது தொடங்கி உள்ளது .

இயக்குநர் முருகதாஸ் தர்பார் படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்குவதாக இருந்தார் . ஆனால் நடிகர் விஜய்க்கு அந்த கதை பிடிக்காமல் போனது இதனால் படம் இயக்கும் வாய்ப்பை இழந்தார் முருகதாஸ் . அதன் பிறகு தற்போது தன் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க உள்ளார் முருகதாஸ் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus