விஜய் செய்யாததை செய்ய துடிக்கும் சிவா கார்த்திகேயன் !

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் டான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ளார் . S.J.சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார் . பிரியங்கா அருள் மோகன் மீண்டும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

டான் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . இந்த படம் வருகின்ற மே மாதம் 13-ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன் . இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது . இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியும் தருவாயில் உள்ளது .

இந்நிலையில் இந்த படத்திற்கு ப்ரின்ஸ் என தலைப்பு வைத்து இருந்தார்கள். இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்த படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு மொழி கற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது .’பிரின்ஸ்’ படத்திற்காக முதல் முறையாக தெலுங்கில் டப்பிங் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் தெலுங்கில் சரளமாகவும் தெளிவாகவும் பேசுவதற்கான நுட்பங்களைக் கற்றுக் கொண்டு இருப்பதாகவும், விரைவில் படத்திற்கான டப்பிங் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நடிகர்களான விஜய் ,சூர்யா போன்ற நடிகர்கள் தெலுங்கு டப்பிங்கை அவர்கள் பேசுவது இல்லை .சிவகார்த்திகேயன் எடுக்கும் இந்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிகிறது .

Share.