தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தன்னுடைய நகைச்சுவையான பேச்சின் மூலமும் சிறந்த நடிப்பின் மூலமும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார்.
கொரோனா லாக்டவுனிற்கு முன்னர் சிவகார்த்திகேயன் “அயலான்” மற்றும் “டாக்டர்” ஆகிய படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “செல்லம்மா” பாடல் அனிருத் ரவிச்சந்தர் இசையில் வெளியாகி அவரது ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது.
தற்போது புதிய செய்தி என்னவென்றால் நடிகர் சிவகார்த்திகேயன் “டாக்டர்” படத்தில் நடித்து முடித்த பிறகே “அயலான்” படத்தில் நடிப்பார் என்று குறிப்பிட்ட வட்டாரம் தெரிவிக்கிறது.
லாக்டவுனிர்க்கு முன்னர் இரு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது “டாக்டர்” படத்தின் இறுதிக் காட்சிகள் முடியும்வரை “அயலான்” படத்தில் நடிக்க மாட்டார் என்றும் தற்போது டாக்டர் படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் நடக்கவுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
“அயலான்” படத்தை இயக்குனர் ரவிக்குமாரும், “டாக்டர்” படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்கள். 24ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து அயலான் படத்தை தயாரிக்கிறார்கள். டாக்டர் படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரோடக்சன்ஸ் மற்றும் கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.அயலான் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லாக்டவுன் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்ட பின் சிவகார்த்திகேயனின் இந்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.