டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது இவர் நடிப்பில் ‘அயலான், மாவீரன்’, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘மாவீரன்’ படத்தை ‘மண்டேலா’ புகழ் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை 14-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸாகவுள்ளது.
2010-ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் சிவகார்த்திகேயன். இவர்களுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் உள்ளனர். இன்று (ஜூலை 12-ஆம் தேதி) மகனின் இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு சிவகார்த்திகேயன் இன்ஸ்டாகிராமில் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார்.