தமிழ் சினிமாவின் முன்னணி கமர்சியல் நடிகர்களில் ஒருவராக தற்போது திகழ்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
தொலைக்காட்சியில் மேடை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்பு வெள்ளித்திரையில் கால் பதித்த இவர், 2012ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான “மெரினா” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
தனது நகைச்சுவையான பேச்சாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த இவர், “மனம் கொத்தி பறவை”, “எதிர்நீச்சல்”, “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” போன்ற படங்களில் அதிகமாக நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்து பின்பு படிப்படியாக சில ஆக்ஷன் காட்சிகளிலும் நடிக்க தொடங்கினார்.
இதைத் தொடர்ந்து இவர் நடித்த “மான்கராத்தே”, “காக்கி சட்டை”, “ரஜினிமுருகன்”, “ரெமோ”, “வேலைக்காரன்”, “சீமராஜா”, “மிஸ்டர் லோக்கல்”, “நம்ம வீட்டு பிள்ளை”, “ஹீரோ” ஆகிய படங்களில் ஒரு சில ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய திரைக்கதையில் நடித்திருந்தார்.
தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் “டாக்டர்” திரைப்படத்திலும், ரவிக்குமார் இயக்கத்தில் “அயலான்” திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
தற்போது புதிய செய்தி என்னவென்றால் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான “அளவைகுந்தபுரமுலோ” திரைப்படத்தின் ரீமேக் உரிமையை சிவகார்த்திகேயன் பெற்றுள்ளதாகவும், இந்த படத்தில் தனது எஸ்கே புரோடக்சன்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனே நடிக்கவுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக முடிவு செய்துள்ளதாகவும், பெரும்பாலும் அல்லு அர்ஜுன் முழுவதும் மாஸ் கதாபாத்திரத்தில் நடிப்பார் இந்த கதாபாத்திரத்தை சிவகார்த்திகேயன் எப்படி நடிப்பார் என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. எனினும் இந்த படத்தை பற்றி எந்தவித அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவராத நிலையில் இந்த செய்தி இன்னும் உறுதியாகவில்லை.