தமிழ்சினிமாவில் சில கதைகளை பிரபல நடிகர்கள் வேண்டாம் என ஒதுக்கி அதை சின்ன நடிகர்கள் நடித்து அந்த கதையின் மூலமே அவர்கள் பிரபலங்களான கதை ஏராளம். இந்தக் கதை ரசிகர்களிடையே வெற்றி பெறுமா என்ற கேள்வியால் பலர் இதைப் போன்ற நல்ல வாய்ப்புகளை நழுவ விட்டுள்ளார்கள்.
இந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயனை முதன்முதலில் “கடைக்குட்டி சிங்கம்” திரைப்படத்தில் நடிப்பதற்கு தேர்வு செய்தார்கள் என்றும் பின்பு சில எமோஷனல் காட்சிகளில் நடிப்பதற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று கருதிய சூர்யாவின் தம்பி கார்த்தியை அணுகியதாகவும் தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் இந்த படம் வெளியான போது துருதுருவென்று வேடங்களில் நடித்து வந்ததால் எமோஷனல் காட்சிகளுக்கு இவர் செட்டாக மாட்டார் என்று திரைப்படக் குழு கருதியதாம்.
ஆனால் தற்போது எமோஷன், ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என்ற அனைத்து தளங்களிலும் சிவகார்த்திகேயன் கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டிராஜ் எழுதி இயக்கிய இந்த திரைப்படத்தில் கார்த்தி, சத்யராஜ், சாயிசா, பிரியா பவானி சங்கர், உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
சக்தி பிலிம் பேக்டரி தயாரிப்பில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தால் அவருக்கு அது பெரிய மைல் கல்லாக அமைந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.