Amaran : சிவகார்த்திகேயனின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘அமரன்’ படத்தின் மாஸான செகண்ட் லுக்!

  • February 17, 2024 / 06:48 PM IST

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இப்போது இவர் நடிப்பில் ‘அமரன்’, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படம் என 2 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘அமரன்’ படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் 21-வது படமாம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘ப்ரேமம்’ படம் மூலம் ஃபேமஸான சாய் பல்லவி நடிக்கிறார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

இதனை ‘சோனி பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ மூலம் தயாரிக்கிறாராம். இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது.

நேற்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டீசரையும் ரிலீஸ் செய்தனர். இப்போஸ்டர் மற்றும் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இந்நிலையில், இன்று சிவகார்த்திகேயனின் பர்த்டே ஸ்பெஷலாக இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus