Ayalaan 2 : தயாராகுகிறது சிவகார்த்திகேயனின் ‘அயலான் 2’… இதன் VFX & CGI-க்கான பட்ஜெட்டே இத்தனை கோடியா?

  • January 23, 2024 / 05:32 PM IST

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் ‘அயலான்’, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படம், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் சயின்ஸ்-ஃபிக்ஷன் படமான ‘அயலான்’ கடந்த ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் ரவிக்குமார் இயக்க, ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

மேலும், முக்கிய ரோல்களில் இஷா கோபிகர், ஷரத் கெல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் வலம் வரும் ஏலியன் கேரக்டருக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார்.

இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் பார்ட் 2 உருவாகப்போவதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது. இதன் VFX & CGI பணிகளுக்கு மட்டுமே ரூ.50 கோடி பட்ஜெட் போட்டிருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus