சிவகார்த்திகேயனின் ‘அயலான்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த GLIMPSE!

  • April 24, 2023 / 11:42 PM IST

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அயலான், மாவீரன்’, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் சயின்ஸ்-ஃபிக்ஷன் படமான ‘அயலான்’-யின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை இயக்குநர் ரவிக்குமார் இயக்க, ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் இஷா கோபிகர், ஷரத் கெல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில், படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘வேற லெவல் சகோ’வை ரிலீஸ் செய்தனர். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைத்து பாடியிருந்த இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, இப்படத்தின் GLIMPSE-ஐ ரிலீஸ் செய்துள்ளனர். இந்த GLIMPSE படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. படத்தை இந்த ஆண்டு (2023) தீபாவளிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus