Ayalaan : சிவகார்த்திகேயனின் சயின்ஸ்-ஃபிக்ஷன் படமான ‘அயலான்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • January 12, 2024 / 04:33 PM IST

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் ‘அயலான்’, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படம், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் சயின்ஸ்-ஃபிக்ஷன் படமான ‘அயலான்’ இன்று (ஜனவரி 12-ஆம் தேதி) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் ரவிக்குமார் இயக்க, ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

மேலும், முக்கிய ரோல்களில் இஷா கோபிகர், ஷரத் கெல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் வலம் வரும் ஏலியன் கேரக்டருக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார்.

இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus