நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “டாக்டர்”. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயனே தயாரித்துள்ளார். “கோலமாவு கோகிலா” படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் வரும் “செல்லம்மா” என்ற பாடலை ஏற்கனவே திரைப்படக் குழு சில வாரங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது.
இந்த செல்லம்மா பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி இந்த பாடலை பாடியிருக்கிறார்கள்.
தற்போது இந்த பாடல் யூடியூபில் 75 மில்லியன் வியூஸ்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக சிவகார்த்திகேயன் ப்ரோடக்சன்ஸ் மற்றும் kjr ஸ்டுடியோஸ் இந்த செய்தியை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள்.
#Chellamma strikes 75M views
Vera mariiii
ICYMI: https://t.co/7n1CkH5RKs
@Siva_Kartikeyan
@anirudhofficial
#Anirudh, @jonitamusic#DOCTOR | #75MForChellamma | @KalaiArasu_ | @Nelsondilpkumar | @priyankaamohan | @kjr_studios | @SonyMusicSouth pic.twitter.com/PAC62iRKMT
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) December 13, 2020