சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ – அப்டேட்!

  • July 13, 2020 / 10:08 PM IST

சின்னத்திரையில் வெற்றிபெற்று பின் வெள்ளித்திரைக்கு சென்று அங்கு பெரிய கதாநாயகனாய் தற்போது வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்து உருவாக்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் “டாக்டர்”.

இந்த படத்தின் புதிய அப்டேட்டை தற்போது இந்த படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், தெலுங்கு புகழ் நடிகை பிரியங்கா அருள்மோகன், யோகி பாபு, வினை ஆகியோர் நடிக்கவுள்ளார்கள்.

இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தான் தயாரிக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளார். தற்போது புதிய அப்டேட் என்னவென்றால், வருகிற ஜூன் 16ஆம் தேதி அனிருத் இசையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் “செல்லம்மா” வெளியிடப்போவதாக தற்போது திரைப்படக்குழு அறிவித்துள்ளார்கள்.

அவர்கள் இந்த அறிவிப்பை ஒரு வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோவில் இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார், சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் உரையாடுவது போன்று எடுத்துள்ளார்கள். இந்த புதிய தகவலையடுத்து அவரது ரசிகர்கள் “செல்லம்மா” பாடலைக் கேட்க ஆவலாக காத்திருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus