சிவகார்த்திகேயன் படத்தின் செல்லமா சிங்கிள் செய்த சாதனை!

  • August 15, 2020 / 06:01 AM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “டாக்டர்”. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயனே தயாரித்துள்ளார். “கோலமாவு கோகிலா” படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் வரும் “செல்லமா” என்ற பாடலை ஏற்கனவே திரைப்படக் குழு சில வாரங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது. அந்தப்பாடல் தற்போது யூடியூபில் சுமார் 20 மில்லியன் வியூஸ்களை பெற்று சாதனை படைத்த இந்த செய்தியை திரைப்படக் குழு தற்போது மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி மிர்ச்சி சார்ட்ஸ் லிஸ்டில் இந்தப்பாடல் முன்னணியில் இருக்கிறதாம்.

இந்த செல்லம்மா பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி இந்த பாடலை பாடியிருக்கிறார்கள்.

டாக்டர் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் வினை வில்லனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விரைவில் வெளியாகவிருக்கும் டாக்டர் திரைப்படத்தை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus