சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் OTTயிலா?

  • December 11, 2020 / 07:03 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “டாக்டர்”. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயனே தயாரித்துள்ளார். “கோலமாவு கோகிலா” படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் வரும் “செல்லம்மா” என்ற பாடலை ஏற்கனவே திரைப்படக் குழு சில வாரங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது.

ஆனால் இந்த படத்தை குறித்து வேறு எந்த அப்டேட்களும் வெளிவராத நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற டிசம்பருக்குள் முடியுமென்றும் ஒரு பாடல் காட்சி மட்டுமே படம் பிடிப்பதற்கு பாக்கி இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் மற்றும் KJR ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் OTT நிறுவனம் தற்போது பெற்றுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இருப்பினும் இந்தப் படம் முதலில் தியேட்டரில் தான் வெளியாகும் என்றும், அதன்பின் இந்த படம் நெட்பிளிக்ஸ் இல் வெளிவரும் என்றும் தகவலை தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வரும் நிலையில் 2021 சம்மர் மாதத்தில் இந்த படம் வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus