மார்ச் 26-ஆம் தேதி ரிலீஸாகவிருந்த சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ரிலீஸ் ஒத்தி வைப்பு!

  • March 9, 2021 / 06:43 PM IST

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’, ‘அயலான்’ மற்றும் ‘டான்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் இயக்குநர் நெல்சன் இயக்கி வரும் ‘டாக்டர்’ படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் என்பவர் நடித்து கொண்டிருக்கிறார். சமீபத்தில், இதன் படப்பிடிப்பு முடிந்தது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில், இந்த படத்தை வருகிற மார்ச் 26-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக சிவகார்த்திகேயன் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தற்போது, வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இப்படத்தின் ரிலீஸை தள்ளி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இன்னும் சில நாட்களில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.