OTT-யில் ரிலீஸாகிறதா சிவகார்த்திகேயனின் படம்?… ஷாக் மோடில் ரசிகர்கள்!

  • September 10, 2020 / 11:00 AM IST

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, Mr.லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, ஹீரோ’ என படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர், அயலான்’ மற்றும் இயக்குநர் தேசிங் பெரியசாமி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கடந்த சில மாதங்களாக ‘கொரோனா’ பிரச்சனையால் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளதால், தயாரிப்பாளர்கள் படங்களை நேரடியாக OTT-யில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படமும் பிரபல OTT தளத்தில் ரிலீஸ் செய்ய பேச்சு வார்த்தை நடப்பதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. இயக்குநர் நெல்சன் இயக்கி வரும் இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் என்பவர் நடித்து கொண்டிருக்கிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus