பாக்ஸ் ஆஃபிஸில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன்… 12 நாட்களில் ‘டாக்டர்’ செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
October 21, 2021 / 04:49 PM IST
|Follow Us
டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’, ‘அயலான்’, ‘டான்’, ‘சிங்கப்பாதை’ மற்றும் இயக்குநர் அனுதீப் கேவி படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள ‘டாக்டர்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.
இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் என்பவர் நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வினய், அர்ச்சனா, யோகி பாபு, மிலிந்த் சோமன், இளவரசு, அருண் அலெக்ஸாண்டர், தீபா ஷங்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 12 நாட்களில் இப்படம் உலக அளவில் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.