சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அயலான்’, ‘டான்’, ‘சிங்கப்பாதை’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘டான்’ படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தனது ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனிஸ்காந்த், பால சரவணன், காளி வெங்கட், RJ விஜய், ஷிவாங்கி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. தற்போது, நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் இப்படத்தின் சூப்பரான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளார். இந்த போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.
Here is the first look of #DON 😎 #DONFirstLook @Dir_Cibi @anirudhofficial @priyankaamohan @iam_SJSuryah @thondankani @sooriofficial @KalaiArasu_ @SKProdOffl @LycaProductions @bhaskaran_dop @Inagseditor @Bala_actor @RJVijayOfficial @sivaangi_k pic.twitter.com/Y0a8wGA4AK
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 10, 2021