அடேங்கப்பா… சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • August 29, 2022 / 07:58 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் ‘அயலான்’, ‘டான்’, ‘ப்ரின்ஸ்’, ‘மாவீரன்’, ராஜ்குமார் பெரியசாமி படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்த ‘டான்’ படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தனது ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்திருந்தார்.

இப்படம் இந்த ஆண்டு (2022) மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும், முக்கிய ரோல்களில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனிஸ்காந்த், பால சரவணன், காளி வெங்கட், RJ விஜய், ஷிவாங்கி ஆகியோர் நடித்திருந்தனர்.

இதற்கு அனிருத் இசையமைத்திருந்தார், கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்திருந்தார், நாகூரான் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், உலக அளவில் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.122.5 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus