சிவகார்த்திகேயன் – பிரியங்கா ஜோடியாக நடிக்கும் ‘டான்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

னிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’, ‘அயலான்’, ‘டான்’, ‘சிங்கப்பாதை’ மற்றும் இயக்குநர் அனுதீப் கேவி படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘டான்’ படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தனது ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனிஸ்காந்த், பால சரவணன், காளி வெங்கட், RJ விஜய், ஷிவாங்கி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். பல மாதங்களாக இப்படத்தின் ரிலீஸுக்காக சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது, படத்தை அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 26-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.