கார்த்தி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் நண்பர் !

  • February 20, 2023 / 10:44 AM IST

நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான படம் சர்தார் . இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார் . கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வாரத்தில் வெளியான சர்தார் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது .

இந்நிலையில் நடிகர் கார்த்தி நடிக்கும் அவரது 25 படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது .
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜப்பான் என்று தலைப்பு வைத்துள்ளனர் . குக்கூ , ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ராஜூமுருகன் இந்த படத்தை இயக்க உள்ளார் . அனு இம்மானுவேல் இந்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் மேலும் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் .

இந்நிலையில் ஜப்பான் படத்தில் கனா படத்தின் இயக்குநர் அருண் ராஜா காமராஜ் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ள என்ற செய்தி வெளியாகியுள்ளது . இதற்கு முன் சில படங்களில் சின்ன சின்ன பாத்திரங்களில் நடித்து வந்த அருண் ராஜா தற்போது முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus