சிவகார்த்திகேயன் டாக்டர் பட ஹீரோயினின் அடுத்த திரைப்படம்!

  • September 21, 2020 / 12:03 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் டாக்டர்.

தற்போது இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கும் பிரியங்கா அருள் மோகன் சர்வானந்த் நடிப்பில் உருவாகிவரும் “மகா சமுத்திரம்” என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியானது. நடிகர் நானியின் “காங் லீடர்” படத்தில் நடித்திருந்த பிரியங்கா அருள் மோகன் தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள டாக்டர் படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கடுத்து தற்போது இவர் சர்வானந்த் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக செய்தி வந்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus