சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா ‘அமேசான் ப்ரைம்’?
September 26, 2022 / 11:41 PM IST
|Follow Us
டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது இவர் நடிப்பில் ‘அயலான், ப்ரின்ஸ், மாவீரன்’, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘மாவீரன்’ படத்தை ‘மண்டேலா’ புகழ் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்குகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் மிஷ்கின், சரிதா, யோகி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள். இதனை ‘சாந்தி டாக்கீஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை ‘அமேசான் ப்ரைம்’ நிறுவனம் ரூ.34 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படம் திரையரங்குகளில் தான் முதலில் ரிலீஸாகுமாம். அதன் பிறகே OTT-யில் வெளியாகுமாம்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.