சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ மேக்கிங் வீடியோ… படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • April 24, 2023 / 10:54 AM IST

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது இவர் நடிப்பில் ‘அயலான், மாவீரன்’, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘மாவீரன்’ படத்தை ‘மண்டேலா’ புகழ் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்குகிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் மிஷ்கின், சரிதா, யோகி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள். இதனை ‘சாந்தி டாக்கீஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், இந்த படத்தை வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக அறிவித்ததுடன், படத்தின் மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus