தியேட்டருக்கு நோ… OTT-யில் ரிலீஸாகும் சிவகார்த்திகேயனின் புதிய படம்!

  • June 26, 2021 / 05:35 PM IST

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர், அயலான்’ மற்றும் ‘டான்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இது தவிர சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரெடியாகி வரும் படம் ‘வாழ்’.

இப்படத்தை ‘அருவி’ படம் மூலம் ஃபேமஸான அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கி உள்ளார். இதில் பிரதீப், பானு, திவா, யாத்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். தற்போது, இந்த படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் பிரபல OTT தளமான ‘சோனி லைவ்’-வில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus