‘டாக்டர், அயலான், டான்’-க்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கப்போகும் புதிய பட டைட்டில்?

  • April 8, 2021 / 07:57 PM IST

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’, ‘அயலான்’ மற்றும் ‘டான்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘டாக்டர்’ படத்தை ரம்ஜானுக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்காக ஒரு ஹேப்பி நியூஸ் கிடைத்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள ஒரு புதிய படத்துக்கு ‘சிங்கப்பாதை’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாம். இந்த படத்தை அறிமுக இயக்குநர் அசோக் இயக்க உள்ளார். மிக விரைவில் இப்படத்தின் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus