டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, Mr.லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, ஹீரோ’ என படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’, ‘அயலான்’ மற்றும் ‘டான்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஐந்து புதிய படங்களுக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த ஐந்து படங்களையுமே ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாம். இதில் ஒவ்வொரு படத்துக்கும் ரூ.15 கோடி என சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். மிக விரைவில் இந்த ஐந்து படங்களின் இயக்குநர்கள் யார் யாரென அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.