டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன்’ என படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’, ‘அயலான்’ மற்றும் இயக்குநர் தேசிங் பெரியசாமி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தான் இயக்க உள்ளாராம். இவர் டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். சிவகார்த்திகேயனுக்கு சிபி சக்கரவர்த்தி கூறிய கதை மிகவும் பிடித்து விட்டதாம். ஆகையால், உடனே கிரீன் சிகனல் கொடுத்து விட்டாராம் சிவா. இந்த படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்க உள்ளதாம்.